fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்

தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம்

தருமபுரி மாவட்டத்தில் அன்னசாகரம், எட்டிமரத் துபட்டி, இலளிகம், உங்கரான அள்ளி உள் ளிட்ட பல்வேறு கிராமங் களில் சுமார் 2000 குடும்பத்தினர்கள் தலைமுறை தலைமுறையாக சிறு அளவிலான குடிசை தொழில் என்ற வகையில் வீடுகளுக்குள் விசைத்தறிகளை நிறுவி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிறு குடிசைத் தொழிலாக வீட்டில் நடத்திவரும் விசைத்தறியாளர்களின் வீடுகளுக்கும், தொழிற்சா லைக்கான வரி விகிதத்தை கொண்டுவருவது என்பது அவர்களுக்கு மிகப் பெரிய வரிசுமையை ஏற்படுத்தும், விசைத்தறி நிறுவியுள்ள வீட்டிற்கான வீட்டுவரி விகிதத்தை தொழிற்சாலை வரியாக மாற்றாமல் இருக்க தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதி விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.

இதனை அறிந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அன்னசாகரம் பகுதிக்கு நேரில் சென்று விசைத்தறி செய்யும் வீடுகளை ஆய்வு செய்தார்.

அப்பொழுது அவர் கூறியதாவது, இப்பகுதியில் 1000த்திற்கும் மேற்பட்டோர் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். பெரும்பாலனோர் தங்களின் ஓடு வீடுகளில் விசைத்தறி நிறுவி தொழில் செய்து வருகின்றனர்.
சிறிய அளவிலான தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இத்தொழிலை தவிர வேறுதொழில் எதுவும் தெரியாது. விசைத்தறி நிறுவியுள்ள வீடுகளுக்கான நகராட்சி வரி விதிப்பு விகிதத்தை தொழிற்சாலை வரியாக மாற்றாமல் இருக்கும் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கும், நகராட்சி நிர்வாக துறைக்கும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்று வரிவிதிப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக விசைத்தறியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாநில பொதுக்குழு உறுப்பினர் க.நம்பிராஜன், மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட தேர்தல் பணிக் குழு தலைவர் வாசு நாயுடு, நகர செயலாளர் கி.வெங் கடேசன், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணை தலைவர் சின்னசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, நகர தலைவர் பாண்டியன், நகர பொறுப்பாளர் நடராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img