fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் பாஜகவினர் தேசியக்கொடி பேரணி

சிதம்பரத்தில் பாஜகவினர் தேசியக்கொடி பேரணி

ஆபரேஷன் செந்தூர் வெற்றியை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் ராணுவ வீரர் களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்அழகன் முன்னாள் எம்.எல்.ஏ தலைமையில் தேசியக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.

இப்பேரணி கீழரதவீதி தொடங்கி பேருந்து நிலையம் உள்ள காந்தி சிலை அருகில் முடிவடைந் தது. இந்த பேரணியை மாவட்ட பொதுச் செய லாளர் அகத்தியர் ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஆர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொதுச் செயலாளர் ராகேஷ், மாவட்ட பொருளாளர் சீனுசங்கர், மாவட்ட துணை தலைவர்கள் ஐயப்பன் ரவி, முருகன் மாலா, மாவட்ட செயலாளர்கள் சிலம்பர சன், நாகராஜன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கோபி ஸ்தபதியார், அருள் பிரபாகரன், மண்டல் தலை வர்கள் பகிரதன், முருகன், வினோத், பிரபாகரன், சரவணன் மற்றும் நிர்வாகிகள் கோபிநாத், திருமாவளவன், மகேஸ்வரி, ரகுபதி, நாகேஸ்வரன் பாபு, ஜனகராஜ், லோகு செந்தில், நாகராஜ், தாமரை முருகன், வெற்றிவேல், குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img