ஈரோடு சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: தற்போதைய காலம் விளையாட்டுத்துறைக்கு ஒரு பொற்காலம். முதலமைச்சர் கோப்பை விளை யாட்டுப் போட்டிகளுக்காக மட்டும் அரசு ஆண்டு தோறும் ரூ.30 கோடி ஒதுக்குகிறது. பல்வேறு போட்டிகளுக்கான பரிசுத் தொகை ரூ.1 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 3 சதவீத விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 100 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 125 பேருக்கு வேலைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்கள் எஸ்.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந் திரகுமார், ஏ.ஜி. வெங்கடாசலம் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.



