திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.,யின் பிறந்த நாளை முன்னிட்டு பல்லடம் கடைவீதி பொங்காளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சுமார் 100 பேருக்கு வேட்டி- சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் என்.வி.ராமசாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் காரணம்பேட்டை சின்னச்சாமி, பல்லடம் நகரத் தலைவர் பிரெண்ட்ஸ் முத்துக்குமார், வட்டாரத் தலைவர்கள் சுப்பிரமணியம், மணியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்ட தலைவர் ஓ.கே.சண்முகம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், த.மா.க. நிர்வாகிகள் பொன்னையன், கணேசன், ராஜசேகர், நடராஜ், ராமசாமி, தேவராஜ், கார்த்திகேயன், மகளிர் அணி பிரபா, இளைஞரணி விசில் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



