fbpx
Homeபிற செய்திகள்டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கணபதி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுரைகளை வழங்கினார்.

உடன் மாமன்ற உறுப்பினர் சரண்யா, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img