Homeபிற செய்திகள்75வது ஆண்டில் சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி நிறுவனம்

75வது ஆண்டில் சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி நிறுவனம்

1948ம் ஆண்டு என் ரங்கா ராவால் சைக்கிள் பியூர் அகர் பத்தி தொடங்கப்பட் டது.இது கோடிக்கணக் கான பக்தர்களின் நம்பிக்கையும் விசுவாசத்தையும் சம்பாதித் துள்ளது. இது என்ஆர் அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

மாற்றுத்திறனாளிக்கான நினைவு பள்ளியையும் தொடங்கி நடத்தி வருகிறது. சமூக அக் கறையோடு சைக்கிள் பியூர் அகர்பத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ராயல் கலெக்சன் ஒரு பகுதியாக ராயல் ரோஸ் ராயல் ஜாஸ்மின், ராயல் சாண்டல் உள்ளிட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இ-காமர்ஸ் தலங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் குயிக் காமர்ஸ் ஆகியவற்றில் இருப்பதன் மூலம் சைக்கிள் பியூர் பிராண்ட் இளைஞர்களை இணைக்கிறது.

தமிழகத்தில் 3000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து மாநிலத்தில் பெண் பணியாளர்களை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றி வருகிறது என அர்ஜுன் ரங்கா தெரிவித்தார். முதுநிலை மண்டல மேலாளர் ராமமூர்த்தி, சீனியர் மார்க்கெட்டிங் மேனேஜர் ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img