HCL ஃபவுண்டேஷன் HCL டெக்கின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக சென்னை யில் தனது தொடக்க விழாவின் போது HCL டெக் கிராண்ட் பான்-இந்தியா சிம்போசியம் 2024 பதிப்பு ஜ்ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வரவிருக்கும் வாரங்களில் பெங்களூரு, பாட்னா, புவனேஷ்வர், ஷில்லாங், போபால், உதய்பூர், டேராடூன் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலும் HCL டெக் கிராண்ட் சிம்போசியம் 2024 நடைபெறும்.
இது குறித்து HCL பவுண்டேஷனின் இயக்குனர் டாக்டர் நிதி பண்டிர் கூறுகையில்,“இந்தியா முழுவதும் உள்ள என்ஜிஓக்களிடம் இருந்து புதுமையான திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்கும், பயனளிக்கக் கூடிய முயற்சிகளுக்கு HCL டெக் மானியத்தின் மூலம் உதவவும் நாங்கள் தயாராக உள்ளோம்“ என்றார்.
இந்த சிம்போசியங்கள் மூலம், HCL டெக் மானியத்தைப் பற்றி என் ஜி ஓக்களுக்கு தெரிவிப்பதை HCL ஃபவுண்டேஷன் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 என்ஜிஓக்களுக்கு ரூ.16.5 கோடி (2.2 மில்லியன்) நிதியை வழங்குகிறது.