fbpx
Homeபிற செய்திகள்வேளாளர் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை

வேளாளர் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை

அனைத்து மாணவர்களும் சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற மற்றும் தொழில் முனைவராக உயர உதவுகிறது ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல் லூரி.

வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் திரு.எஸ்.டி. சந்திரசேகர் கூறியதாவது: கல்லூரி அறக்கட்டளை 50 ஆண்டிற்கு மேலாக 10 கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. அறக்கட்டளையின் ஒரு அங்கமான வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கடந்த 25 ஆண்டு களாக கல்விச் சேவையில் பல சாதனைகளைப் புரிந்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சிறந்த உள் கட்டமைப்பு மற்றும் ஐடி பார்க் வசதிகளை உள்ளடக்கியது.

பல்கலைக் கழக மானியக்குழுவின் தன் னாட்சி, தேசிய மதிப் பீட்டு வாரியத்தின் A+ மற்றும் NBAவின் பல பாடப்பிரிவுகளுக்கான அங்கீகாரம், கடந்த ஆண்டு அகில இந்தியப்
பத்திரிக்கைகளான இந்தியா டுடே வெளியிட்ட வேலை வாய்ப்புத் துறையில் சிறந்த கல்லூரிக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் 9ஆவது இடம், The Week வெளியிட்ட சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் மாநில அளவில் 10ஆவது இடம், Competition Success வெளிட்ட தரவரிசைப் பட்டியலில் 2ஆவது இடம், அண்ணா பல்கலைக் கழகம் இறுதியாக வெளியிட்ட தேர்ச்சி விகிதப் பட்டியலில் மாநில அளவில் 25ஆவது இடம்.

மாணவ மாணவியர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னணி நிறுவனங்களால் வழங்கப்படும் பணி அனு பவங்களை தொழில்முறைப் பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

மேற்கண்ட பயிற்சி யின் மூலம் சிடிஎஸ், இன்போசிஸ், ஆக்சென்சர், விப்ரோ, ஜோஹோ, ஆரக்கிள், அமேசான், ஐபிஎம், டிசிஎஸ், சாலிட்டான், எல்அண்ட்டி இன் போடெக், டெல், மெட்டா, கூகுள், மைக்ரோ சாப்ட், இஸ்ரோ, டிஆர்டிஓ ஆகிய சாப்ட்வேர் நிறுவனங் களிலும், பிரேக்ஸ் இந்தியா, அசோக் லேலண்ட், ராபர்ட் போஸ், ரெனால்டு நிசான், ஹண்டாய், டாபே லிமிடெட், ரானே, பெல், ஓஎன்ஜிசி, ஐஓ பிஎல், பிபிசிஎல், செயில், மெட்ரோ, எல்அண்ட் டி, ரிலையன்ஸ், சாம் சங்க், என்எல்சி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஸ்ட் ரைக்கர் குளோபல் டெக்னாலஜி சென்டர், டெலாயிட், கன்சல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட், பிலிப்ஸ் ஹெல்த் கேர், ஆர்பெஸ் மெடிக்கல், சீமன்ஸ், ஆகிய உலகளாவிய தலைசிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்று இந்திய மற்றும் உலகெங்கிலும் 25 வெளி நாடுகளிலும் எங்களது மாணவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

Civil, mechanical, bio medical, medical electronics, electrical and electronics உட்பட அனைத்து துறைகளிலும் 4.0 தொழில்நுட்ப யுத்தியைப் புகுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற செயல்பட்டு வருகிறோம்

இந்தக் கல்வி ஆண்டில் அறக்கட்டளை சார்பில் 155க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ 1.5 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img