fbpx
Homeபிற செய்திகள்‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’: பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு தொழில்நுட்ப உச்சி மாநாடு

‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’: பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு தொழில்நுட்ப உச்சி மாநாடு

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இன்ஸ்டிட்யூஷன்’ஸ் இன்னோ வேஷன் கவுன்சில் சார்பில், ‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’ என்ற ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப உச்சிமாநாடு நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியள வில் பிஎஸ்ஜி டெக் வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறுகிறது.

இந்த உச்சிமாநாட்டில் கல்வித் துறையினர் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல்கள் நடைபெறும். இதில் கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் கவனம் செலுத்தப் படும். மேலும், முன்னணி தொழில் தலைவர்களின் முக்கிய உரைகளும் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் நேரடிப் பயிலரங்குகள், யோசனை முன்வைப்பு அமர்வுகள், போஸ்டர் விளக்கக்காட்சிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் கண் காட்சி ஆகியவை இடம்பெறும். இது பங்கேற்பாளர்களுக்குத் தகவல்களைப் பகிர்ந்து கொள் ளவும், புதிய கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் ஒரு சிறந்த தளமாக அமையும். துவக்க விழாவில் இந்தியாவின் முன்னாள் ஜி20 ஷெர்பா மற்றும் நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அமிதாப் காந்த் சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

சிறந்த நிர்வாகச் சீர்திருத்தவாதி யாகவும், பொதுக் கொள்கை நிபுணராகவும் அறியப்படும் இவர், இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வடிவமைப்பாளர் ஆவார். மேலும், ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ மற்றும் ‘இன்க்ரெடிபிள் இந்தியா’ ஆகிய பிரச்சாரங்களின் பின்னணியில் ஒரு முக்கிய சக்தியாகச் செயல்பட்டவர். இந்தியாவின் முக்கிய கண்டுபிடிப்பு, தொழில் மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளை வடிவமைத்ததில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் கோவை அக்குவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். குமரவேலு கௌரவ விருந்தி னராகப் பங்கேற்பார். பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே.பிரகாசன் தலைமை வகிப்பார். ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து கல்வித்துறை மற்றும் தொழில்துறைக்கு இடையே கருத்துப் பரிமாற்றம் மற்றும் கூட்டு பங்களிப்பை ஊக்கு விக்கும் மேடையாக ‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’ அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img