fbpx
Homeபிற செய்திகள்அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு தொடக்க விழா

அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்பின் தொடக்க விழா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலர் டாக்டர் சி.திருப்பதி சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஜூனியர் சுந்தரேஷ், பேராசிரியர் டாக்டர் எஸ்.சசிகலா மற்றும் வெவ்வேறு துறைகளின் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் தோல் மருத்துவத் துறை தலைவர் மற்றும் மருத்துவக் கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.கே.கவியரசன் வரவேற்புரை வழங்கினார்.

இறுதியாக சமூக மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் டி.கே.செந்தில்முருகன் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img