fbpx
Homeபிற செய்திகள்சேலத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனை கண்காட்சி தொடங்கியது

சேலத்தில் கைவினைப்பொருட்கள் விற்பனை கண்காட்சி தொடங்கியது

கைவினை கலைஞர்களின் திறமையும் பாரம்பரியத்தையும் பொதுமக்களுக்கு நினைவு கூரும் நோக்கில், வரும் டிசம்பர் 08 முதல் 14 வரை “தேசிய கைவினை பொருட்கள் வாரம் -2025” நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இந்த வாரம் முழுவதும் கைவினை கலைஞர்கள் தயாரித்த பாரம்பரிய மற்றும் நவீன கைவினைப்பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைவினை கலைஞர்களின் நேரடி செயல்முறை விளக்ககாட்சி கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.


இந்நிகழ்ச்சியை சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) நே.பொன்மணி நேற்று மாலை திறந்து வைத்தார். இதில், டாக்டர் ராஜா ஸ்தபதி (பூம்பு கார் தமிழ்நாடு இயக்குனர்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள், பித்தளை விளக்குகள், மர சிற்பங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டுகள், ஒவியங்கள், பித்தளை சிலைகள், காகித கூல் பொம்மைகள், வெள்ளை உலோகம் மற்றும் கறுப்பு உலோக சிலைகள், சுடு மண் பொருட்கள் எராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன.
இக்கண்காட்சியானது வரும் 14ம் தேதி (ஞாயறு உட்பட) வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.


இந்த கைவினைப் பொருட்கள் வாரத்தினை ஒன்றிய அரசின் அபிவிருத்தி ஆணையம் (கை வினைப்பொருட்கள்) மற்றும் பூம்புகார் நிறுவனம் இணைந்து நடத்துகிறது.

படிக்க வேண்டும்

spot_img