கோவை, ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் பெறும் முகாம் நடைபெற்று வருவதை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உள்ளனர்.