பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
பெ.நா.பாளையம் சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நமச் சிவாயம் பேசும்போது, இன்றைய இளைஞர்களின் செயல்பாடு மிகவும் வருத்தத்திற்குரியது.
இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். நாம் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட்டு நம்மையும், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டும் என்றார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. 530 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்