கோவை கொடிசியா வளாகத்தில் கிரடாய் அமைப்பின் சார்பில் நேற்று (ஆக.11) ஃபேர்புரோ 2023 கண்காட்சியை தமிழக வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி திறந்து வைத்தார். இக்கண்காட்சி வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அனைத்து முன்னணி கட்டுமானத்தினரையும் ஒருங்கிணைத்து, சிறப்பான சலுகைகளுடன் வீடு வாங்கும் விற்பனையை கிரடாய் நடத்துகிறது. இந்த சலுகை விற்பனை 3 நாட்களுக்கு மட்டுமே.
வீடு மற்றும் வீட்டுமனை வாங்க விருப்பம் உள்ள உங்கள் நண்பரை ஃபேர்புரோவில் அறிமுகம் செய்து பரவசமூட்டும் போனஸ் பெறலாம். நண்பருக்கு கனவு இல்லத்தை வாங்க ஃபேர்புரோ அறிமுகம் செய்தால், கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களில் ஒவ்வொரு வெற்றிகரமான அறிமுகத்திற்கும் ரொக்கப் பரிசாக சுமார் ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நண்பர் அறிமுக திட்டத்தை எளிமையாக்கும் விதமாக இது டிஜிட்டல் முறையில் க்யூஆர் கோடுகளை பதிவு செய்து, வாட்ஸ் ஆப் போன்றவற்றில் தொடரலாம். எளிதான, வெளிப்படையான பரிவர்த்தனைக்கு இது உதவும்.
பாரத ஸ்டேட் வங்கி,கண்காட்சிக்கான டைட்டில் ஸ்பான்சராக ஆதரவை வழங்கியுள்ளது. கோல்டன் ஸ்பான்சராக கனரா வங்கி ஆதரவை வழங்கியுள்ளது.
கண்காட்சியில் 25 முக்கிய டெவலப்பர்கள், 75-க்கும் மேற்பட்ட திட்டங்கள், 6 முன்னணி அரசு மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்பு, வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்பு, பிளாட்டுகள் விற்பனை ஆகும்.
குறைந்த கால அளவு சலுகை வாய்ப்பு. ரியல் எஸ்டேட் மேம்படுத்துவோர், ஏஜென்ட்டுகள், கூடுதல் சலுகைகள் மற்றும் வீடு வாங்க விருப்பம் உள்ளோருக்கு தனித்துவமிக்க சலுகைகள் உள்ளன.
வீட்டுமனை மீதான கட்டணம், பத்திரப்பதிவு கட்டணத்தில் சலுகை, இலவச வசதிகள், எளிதாக பணம் செலுத்தும் திட்டம், சொத்து வாங்குவோருக்கும், குடும்பத்தினருக்கும், தேடுவோருக்கும் இது நல்ல தருணம்.
தமிழக வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ். முத்துசாமி கண்காட்சியை துவக்கிவைத்து அரங்குகளை பார்வையிட்டார்.
கிரடாய் தென்னிந்திய மண்டல தேசிய துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதரன், கோவை கிரடாய் தலைவர் குகன் இளங்கோ, ஃபோர்புரொ ஒருங்கிணைப்பாளர் முகமது ஷபி செயலாளர் எஸ்.ஆர்.அரவிந்த்குமார், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கனரா வங்கியின் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.



