ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் இயக்கத்தின் 50ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆண்டு கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக தென்னிந்திய திருச்சபையின் கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் இயக்கத்தின் 50ம் ஆண்டு விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்னிந்திய திருச்சபை சார்பில் உலகின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு தென்னிந்திய திருச்சபை சார்பில் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய் யப்பட உள்ளது.
இதன் துவக்க விழா கோவை பந்தய சாலையில் உள்ள சி.எஸ்.ஐ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பேராயர் திமோத்தி ரவீந்திர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.
மரக்கன்று நடும் விழா
இதனைத் தொடர்ந்து பேராயர் திமோத்தி ரவீந்தர் கூறியதாவது: கோவை திருமண்டலத்தில் மாணவர்களை வைத்து மரக்கன்று நடும் விழா தொடங்கி வைத்துள்ளோம்.
மூன்று மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கின்ற எங்களுடைய பள்ளிகள், தேவாலயங்களில் மரக்கன் றுகளை நட்டு வருகிறோம். பழம் தரும் செடிகள் மற்றும் நிழல் தரும் செடிகள் நடவு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கின்ற பசுமை பரப்பை அதிகரிக்க இந்த திட்டத்தை நடத்தி உள்ளோம். அனைத்து தேவாலயங்களிலும் பள்ளிகளில் நிர்வாக பகுதியில் இதனை செய்து உள்ளோம்.
கார்பன் இல்லாத நாட்டை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த தலைமுறைக்கு பசுமையான உலகத்தை நாம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.