காந்திபுரம் பேருந்து நிலைய சந்திப்பு போன்ற முக்கிய இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஆணையாளர் சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சீரான போக்குவரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
உடன் காவல்துறை துணை ஆணையாளர் (போக்குவரத்து) மதிவாணன், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு இணை ஆணையாளர்கள் சிவகமாரன், சந்திரசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சத்தியகுமார், பாலமுருகன், ஈஸ்வரமூர்த்தி, முருகானந்தம், தியாகராஜன், சிவகுருநாதன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மனுநீதி, உதவி கோட்ட பொறியாளர்கள் சோழவந்தான், முரளிகுமார், ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர்.