fbpx
Homeபிற செய்திகள்பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் 101 பொங்கல் வைத்து ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் 101 பொங்கல் வைத்து ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் 75 கிலோ கேக் வெட்டி, 101 பொங் கல் வைத்து அதிமுகவினர் கொண்டாடினர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட் பட்ட 28 வது வார்டு மாஸ்கோ நகரில் மாமன்ற உறுப்பினர் சேகர் தலைமையில் மறைந்த முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முன் னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப் பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளருமான பொள் ளாச்சி.வி.ஜெயராமன் அவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பொங்க பானை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து 101 பெண்கள் பொங்கல் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதையடுத்து முன்னாள் துணை சபாநாயகர், முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்கள் ஆகியோர் கட்சி பலூன்களை பறக்க விட்டனர்.

இதைத்தொடர்ந்து மறைந்த முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா மற்றும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி.கே.பழனிச்சாமி ஆகி யோர் புகைப்படம் பதித்த 75 கிலோ கொண்ட மாபெரும் கேக்கை வெட்டி சிறுவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர். இதில் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு பரிசுகள்

தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள், சிறுவர்களுக்கு வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான விஷிவி.ஆனந்தன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய குமார், எம்ஜிஆர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான குணசேகரன், மாநிலஅம்மா பேரவை இணை செயலாளர் முத்து வெங்கடேசன் உட் பட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img