fbpx
Homeபிற செய்திகள்தி சென்னை சில்க்ஸ் 30-ம் ஆண்டு துவக்க விழா

தி சென்னை சில்க்ஸ் 30-ம் ஆண்டு துவக்க விழா

கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸின் 30-ம் ஆண்டு துவக்க விழா நேற்று (16ம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் நிர்வாக இயக்குனர் பரஞ்சோதி, சந்திரன், கண்ணபிரான், செந்தில், கீதா செல்வகுமார் மற்றும் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

துவக்க விழாவினை சலுகையாக சில்வர் ஸ்டார் சில்க் சாரீஸ் ரூ.350-க்கும், பிராண்டட் பாக்ஸ் சாரீஸ் ரூ.250-க்கும், லெஹெங்கா ரூ.555-க்கும் கொள்முதல் விலையை விட குறைவான விலைக்கு வழங்குவதாகவும், தீபாவளி, நவராத்திரி பண்டிகைக்கான புத்தம் புதிய ரகங்கள் இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் முன்னதாகவே வர வழைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மேலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

மேலும், துவக்கவிழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சாரீஸ் டிரேப் வகுப்பு, விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக மேலாளர் பாலமுருகன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img