fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் சார்பில் பொறியாளர் தின விழா

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் சார்பில் பொறியாளர் தின விழா

அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பள்ளி மற்றும் நிறுவன புதுமை கவுன்சில் இணைந்து பொறியாளர்கள் தின விழாவை ஆழ்ந்த தொழில்நுட்பமும் பொறியியல் சிறப்புமிக்கதன்மையும் இந்தியாவின் டெக்கேட் முன்னேற்றம் என்ற தலைப்பில் நடத்தியது.

விழா பிரார்த்தனை பாடலுடன் தொடங்கி அதன் பின் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொறியியல் பள்ளியின் டீன் டாக்டர் எஸ். சிவகுமாரி, வரவேற் புரையாற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பாரதி ஹரிஷங்கர் தலைமை உரையை வழங்கினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துணை டீன் டாக்டர் ஜூடித் ஜஸ்டின் தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து தலைமை விருந்தினரான ரூட்ஸ் குழும நிறுவனத்தின் கூட்டு மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ். சந்திரசேகர், பெண்கள் தானியங்கி நுண் ணறிவு, இயந்திரக் கற்றல், பொருள்களின் இணையம், நவீன நகரங்கள், நிலைத்த வளர்ச்சி போன்ற துறைகளில் அதிக வாய்ப்புகளைப் பெற வேண்டும் என ஊக்குவித்தார்.

மேலும் வழிகாட்டுதல், குழுப் பணி, தொடர்புகளை விரிவாக்குதல், மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பெண்கள் பொறியாளர்களின் பங்களிப்புகளை கொண்டாடும் சிறு காணொளி திரையிடப்பட்டது.

இதில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிறைவாக சிவில் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ரா.நித்யா நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img