மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சூலூர் அண்ணா நகர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 8 வார்டு அதிமுக செயலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி, முன்னாள் அமைச்சர் முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்வில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குமரவேல், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வி.பி கந்தவேல், பேரூராட்சி கழக செயலாளர் கார்த்திகைவேலன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுமதி கார்த்திகை வேலன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பிரபு ராம், சூலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.பி. அங்கண்ணன், மீனவர் அணி ஆறுமுகம், நகர பொருளாளர் ஆனந்தன், என்.சி குட்டியப்பன், சூலூர் கார்த்தி, மோகன்,பன்னீர், பவி சண்முகம், நாராயணன், டாக்டர் ரதிதேவி, நாகராஜ், சூலூர் இ.ரா. சிவசங்கர், கரிகாலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு வினோத், சபரீசன் பிரபு, மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.