சேலம் மாவட்டம் அயோத் தியாப்பட்டினம் ஊராட்சி ஒன் றியத்தில் மட்டும் 432 பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.19.02 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ரூ.5.57 கோடி மதிப்பீட்டில் 115 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
194 ஊராட்சிகளில் ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் 100 சத வீதம் முடிவடைந்துள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம்.
சேலம் மாவட்டம், அயோத் தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் மக்கள் நலத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் நேற்று (மார்ச் 2) செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்ப டுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தினை அதிகரித்து அதிகளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் வகை யில் அனைத்து பகுதிகளிலும் ஊரக விளையாட்டு மைதானங் கள் உருவாக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, ஊரக விளையாட்டு மைதானங் கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது 194 ஊராட் சிகளில் ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் முடிவ டைந்துள்ளன.
மேலும் 159 ஊராட்சிகளில் இப்பணிகள் 50 சதவீதமும், 32 ஊராட்சிகளில் உரிய இடம் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இன்றைய பயணத்தின்போது அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம் பள்ளி ஊராட்சியில் ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.
ஊரக விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் விளையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மைதானத்திலும் குறைந் தது 2 முதல் 7 விளையாட்டுகள் வரை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிமெண்ட் கான்கிரீட் சாலை
அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.26 லட்சம் மதிப்பீட்டில் செல்லியம்பாளையம் ஆதவன் நகரில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களத்தினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ராஜராஜேஸ்வரி நகரில் ரூ.14.16 லட்சம் மதிப்பீட்டில் 113 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுவரும் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இப்பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.76 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட கால அளவில் முடித்து பொதுமக்களின் பயன் பாட்டிற்குக் கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அயோத்தியாப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 2022–&23-ம் நிதியாண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 48 பணிகள் ரூ.2.61 கோடி மதிப்பீட்டிலும், கிராம ஊராட்சி செயலகம் திட்டத்தில் 3 பணிகள் ரூ.1.28 கோடி மதிப்பீட்டிலும், 15 வது மத்திய நிதி குழு மானியத் திட்டத்தில் 260 பணிகள் ரூ.7.60 கோடி மதிப்பீட்டிலும், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 5 பணிகள் ரூ.19 லட்சம் மதிப்பீட்டிலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக பராமரிப்புப் பணிகள் ரூ.3.29 கோடி மதிப்பீட்டிலும், கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடப் பணிகள் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் என 432 பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.19.02 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ரூ.5.57 கோடி மதிப்பீட்டில் 115 பணிகள் முழுமையாக முடிக்கப் பட்டுள்ளன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் செய்தியாளர் பயணத்தின்போது தெரிவித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிராஜுதீன், வெங்கட்ராமன், உதவி பொறியாளர் ஜெயதிலகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.