fbpx
Homeபிற செய்திகள்விபத்து நடக்கும் ‘பிளாக் ஸ்பாட்’களில் 850 பேரிகார்டுகள் வைக்க திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்

விபத்து நடக்கும் ‘பிளாக் ஸ்பாட்’களில் 850 பேரிகார்டுகள் வைக்க திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்

விபத்து நடக்கும் பிளாக் ஸ்பாட்களில், 850 பேரிகார்டுகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது;

கோவை மாவட்ட போலீசாரின் தீவிர நடவடிக்கையால் விபத்துக்கள் வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், 11 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளது. விபத்து அடிக்கடி நடக்கும் இடத்தை பிளாக் ஸ்பாட்களாக கண்டறியப்பட்டுள்ளது.

அவ்வாறு கண்டறியப்பட்ட, 83 இடங்களில் பேரிகார்டு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 850 பேரிகார்டுகள் வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சூலூர் பகுதியில் பைபாஸ் ரோட்டை கண்காணிக்கும் வகையில், 300 இடங்களில் சி.சி.டி.வி., கேமிரா அமைக்கப்பட உள்ளது.

பைபாஸ் ரோடு, சிந்தாமணி புதூர், நீலம்பூர் போன்ற முக்கிய பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மதுக்கரை பகுதியில் வாளையார் வரையில் வாகனங்கள் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

ரோந்து வாகனங்களிலும் விரைவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட உள்ளது. மேலும் சூலூரில் கட்டுபாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் அதிகளவு நகை, பணம் மீட்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைமில், 29 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதனை போலீசார் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நடப்பாண்டில், 12 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 1.15 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் மோசடியில் பணத்தை இழந்தவர்களில் ஐ.டி., ஊழியர்களே அதிகம். ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆன்லைனில் பகுதி நேர வேலை, அதிக பணம் பெற விரும்பி பணத்தை இழந்து விடுகிறார்கள்.

வங்கியில் பணியாற்றும் ஒருவர் தனது மொபைல் போனில் வந்த ஒ.டி.பி., விவரங்களை கூறி மர்ம நபரிடம் பணத்தை இழந்துள்ளார். சைபர் கிரைம் மோசடி குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img