fbpx
Homeபிற செய்திகள்கோவை காந்தி பூங்காவில் சிகே’ஸ் பேக்கரி திறப்புவிழா

கோவை காந்தி பூங்காவில் சிகே’ஸ் பேக்கரி திறப்புவிழா

சிகே’ஸ் பேக்கரி, கோவை மாநகரில் காந்தி பூங்கா, சுந்தராபுரம், கோவைபுதூர், சாய்பாபா காலனி மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் தனது விற்பனையகங்களை தொடங்கி உள்ளது.

சிகே’ஸ் பேக்கரி, காந்தி பூங்காவில் அமைந்துள்ள அதன் சிறப்பு விற்பனையகத்தை கௌமாரம் பிரசாந்தி அகாடெமி என்ற தொண்டு நிறுவன அமைப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் பங்கேற்புடன் துவக்கி வைத்தது.

இதன் தொடக்க விழாவில் கோவை காவல்துறையின் உதவி ஆணையர் ரவிக்குமார், தலைமை விருந்தினராக பங்கேற்றார். மேலும் இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் தனது பேக்கரி தயாரிப்புகளுக்கான விற்பனை யகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற இம்மாணவர்களோடு சிகே’ஸ் பேக்கரி பகிர்ந்துகொண்டது.

சிகே ஃபுட்ஸ்-ன் இயக்குநர் மனுரஞ்சித் ரங்கநாதன் இந்நிகழ்ச்சி குறித்து கூறுகையில் சமுதாயத்தில் மற்றவர்களைப் போலவே ஊனமுற்றோர்களும், நலிந்த பிரிவி னரும் சமவாய்ப்புகளை பெற்று முன்னேற்றம் காண்கிற ஒரு சமூகத்தை கட்டமைக்க நாங்கள் விரும்புகிறோம், என்றார்.

கோவை மாநகரில் இந்த சிறப்பு விற்பனையகங்களில் ரூ.150-க்கும் அதிகமான தொகைக்கு இங்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரெட் அன்பளிப்பாக வழங்கப் படுகிறது. ரூ.300-க்கும் அதிகமான தொகைக்கு வாங்குபவர்கள், க்ரீம் சேர்க்கப்படாத, சுவையான உலர் கேக்கை வெகுமதியாகப் பெற்று மகிழலாம்.

படிக்க வேண்டும்

spot_img