கோவை தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் தீயணைப்பு சேவை மற்றும் மீட்புக் குழு சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்க பயிற்சி முகாம் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். தீ தடுப்பு குறித்து தீயணைப்பு வீரர்கள் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பதில் அளித்தனர்.
செயல்முறைப் பயிற்சியில் மாணவர்களும் பங்கேற்று தீ தடுப்பு குறித்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இப்பயிற்சி அனைத்துத் தரப்பு மக்களும் புரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் இருந்தது. மனித சேவையின் மகத்தான பணியாக தீ தடுப்பு, பேரிடர் மீட்பு சேவை அமைந்துள்ளது என பயிற்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.



