யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளை சர்வதேச மூத்தோர் தினம், சர்வதேச சைவ தினம் மற்றும் சர்வதேச இசை தின விழா என முப்பெரும் விழாவை ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தலைமையாசிரியை கங்கா நாயுடு தலைமையில் ஞாயிறன்று நடத்தியது.
யூத் ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள் சிவகாமி, சங்கரன், குமார், விஜயா, வேல்முருகன், தனலட்சுமி, ஞானப்பிரகாசம் செந்தில் குமார் வாழ்த்துரை வழங்கினாரகள்.
துணைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஹாஸ்டல் சேர்மன் டாக்டர். ஐயப்பன், ராஜசூர்யா, செந்தாமரை கண்ணன், 120 இசைப்பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர்.