fbpx
Homeபிற செய்திகள்அரவிந்த் கண் மருத்துவமனையில் விழித்திரை சிகிச்சைக்கு உலகத்தர சிறப்பு மையம் திறப்பு

அரவிந்த் கண் மருத்துவமனையில் விழித்திரை சிகிச்சைக்கு உலகத்தர சிறப்பு மையம் திறப்பு

கோவை அரவிந்த் கண் மருத்துவ மனை வளாகத்தில், விழித்திரை சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை பயிற்சிக் கான இந்தியாவின் முதல் உலகத் தர சிறப்பு மையம் திறக்கப்பட்டது. அல் கான் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இம்மையம், கண் மருத்துவ முதுநிலை மாணவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு நவீன உலர் மற்றும் ஈர ஆய்வக பயிற்சிகளை வழங்குகிறது.

மெய்நிகர் உருவகப்படுத்திகள், செயற்கை கண் மாதிரிகள், முப்பரிமாண அச்சிடப்பட்ட கண் மாதிரிகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் மூலம் அறுவைச் சிகிச்சைக்கு முன்பே மருத்துவர்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் நரேந்திரன் கூறுகையில், “அடுத்த தலை முறை விழித்திரை அறுவைச் சிகிச்சை நிபுணர்களை உருவாக்கும் முக்கிய மைல் கல்லாக இந்த மையம் அமையும்,” என்றார்.


அல்கான் நிறுவனத்தின் சர்வதேசப் பிரிவு தலைவர் டாக்டர் ராஜ் நாராயணன், “இந்த மையம், உலகத் தரமான கண் மருத்துவப் பயிற்சியை மேலும் வலுப்படுத்தும்,” என்றார்.திறப்பு விழாவில் கங்கா மருத்துவமனை தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். ராஜா சபாபதி, அரவிந்த் கண் பராமரிப்பு அமைப்பின் மூத்த மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img