வெளிநாடுகளில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ள, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், ஈசிலிங்க் அகாடமியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்நிகழ்ச்சியில் எஸ். என்.ஆர்.சன்ஸ் அறக் கட்டளை சார்பில் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி, நாராயணசாமி, ஈசிலிங்க் அகாடமி நிர்வாக இயக்குநர் சோனி அக்கரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி சார்ந்த கலந்துரையாடல்கள் குறித்தும் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
இத்தகவலை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார்.