fbpx
Homeபிற செய்திகள்பண்டிகை கால சலுகை: புதிய அம்சங்களுடன் ஸ்கோடா கார்கள் அறிமுகம்

பண்டிகை கால சலுகை: புதிய அம்சங்களுடன் ஸ்கோடா கார்கள் அறிமுகம்

பண்டிகை கால சலுகை விலை, புதிய அம்சங்களுடன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் புதிய வகை கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா திகழ்கிறது. பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்குமான 5 நட்சத்திர தரச் சான்றிதழ் மதிப்பீடு பெற்ற கார்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

பண்டிகை கால கவர்ச்சிகரமான விலையிலும், புத்தம் புதிய அம்சங் களுடனும் ஸ்லேவியா எடிஷன் தொடர்கிறது. இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குநர் பீட்டர் சோல்க் கூறியதாவது:

ஸ்கோடா குடும்பத்தில் மேலும் அதிக வாடிக் கையாளர்களை ஈர்ப்பதே எங்கள் நோக்கம். வாடிக் கையாளர்களுக்கு பாதுகாப்பான குடும்ப கார்களை வழங்குவதுடன் சேவைகள் மூலம் உயர்நிலை திருப்தியை வழங்குவதே எங்கள் விருப்பம்.

ஸ்கோடா நிறுவனத்தின் பண்டிகைகால சலுகைகள், மேம் பாடுகள் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பை கூடுத லாக மெருகூட்டுகின்றன என்றார்.
குஷாக், ஸ்லேவியா கார்களுக்கு பண்டிகை கால சலுகையாக கவர்ச்சிகரமான அடிப்படை விலையாக ரூ.10.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்களில் ஓட்டுநர், இணை ஓட்டுநருக்கான மின் இருக் கைகள் (பிரிவில் முதன் முதலாக), ஒளிரும் ஃபுட்வெல் உள்ளிட்ட புதிய அம்சங்கள் உள்ளன.
டேஷ்-இன் மையப் பகுதியில் 25.4 செ.மீ. ஸ்கோடா பிளே செயலி களுடன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை இருக்கும். ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

குஷாக், ஸ்லேவியா கார்களில் பூட்டில் சப்-ஊஃபர், குஷாக் மாண்டே கார்லோவில் மின் இருக்கைகளும், ஒளிரும் ஃபுட்வெல்லும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சங்கள் அனைத்தும் புத்தம் புதிய ஸ்லேவியா மேட் எடிஷனில் பொருத்தப்பட்டுள்ளன.

லிமிடெட் எடிஷன் செடான் மேட் ஃபினிஷில் கார்பன் ஸ்டீல் பெயிண்டால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்க் மேட் கார்பன் ஸ்டீலுக்கு மெருகேற்றும் வகையில் மென்மையான வடிவமைப்பில் டோர் ஹேண்டில், ஓஆர்விஎம்-கள் டீப் கிளாஸி பிளாக்கில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

ஸ்லேவியா மேட் எடிஷன் வாங்கும் வாடிக்கையாளர்கள் 1.0, 1.5 டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின்கள் ஆகியவற்றில் விரும்பியதை தேர்தெடுக்கலாம்.
6 ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீட் ஆட்டோமேடிக், 7 ஸ்பீட் டிஎஸ்ஜி ஆகியவற்றில் விருப்பமான கார்களை தேர்வு செய்யலாம்.

படிக்க வேண்டும்

spot_img