கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம். வங்கியியல் மற்றும் காப்பீட்டுத் துறை சார்பில், “வங்கியியல் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கில் நேற்று (25ம் தேதி) நடைபெற்றது.
ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பி.காம். வங்கியியல் மற்றும் காப்பீட் டுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆர்.ஐஸ்வர்யா வரவேற் றுப் பேசினார்.
பெங்களூரு ஹெச்.டி.எஃப்.சி. வங்கி முதுநிலை துணைத் தலை வர் திரு.இராஜேஷ்குமார் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆய்வாளர்கள் மற் றும் பேராசிரியர்களின் 82 ஆய் வுக் கட்டுரைகள் அடங்கிய, கருத்தரங்க மலரைவெளியிட்டு, உரையாற்றினார்.
பின்னர் பெங்களூரு யஷ்வந்த்பூர் கிறிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழக, வணிக மற்றும் மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆர்.ஹரிஹரன், “நிதிசேமிப்பு மற்றும் அணுகுமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பிலும், மலேசியா டெய்லர்ஸ் பல்கலைக் கழக கணக்கு மற்றும் நிதியியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஹம்டன் அமீர் அலிஅல்-ஜாய்ஃபி, “வாடிக் கையாளர் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவ தற்கு உதவும் சாபோட் மற்றும் மெய் நிகர்” என்ற தலைப்பில் இணைய வழியிலும் உரையாற்றினர்.
இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் மாணவர்கள் 390 பேர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பி.காம். வங்கியியல் மற்றும் காப்பீட்டுத் துறைத்தலைவர் முனைவர் டி.பிரபு வெங்கடேஷ் தலைமையில் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். முடிவில் உதவிப் பேராசிரியர் முனைவர் பி.நதியா நன்றி கூறினார்.