Homeபிற செய்திகள்குறைவடையும் மகசூல், பருவ கால மாற்றங்கள் தோட்டத் தொழிலை பாதித்தன: வர்கீஸ் வைத்யன்

குறைவடையும் மகசூல், பருவ கால மாற்றங்கள் தோட்டத் தொழிலை பாதித்தன: வர்கீஸ் வைத்யன்

தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர் சங்கத்தின் 75-வது ஆண்டு விழா கோவை யில் நடந்தது. குன்னூர் இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் டாக்டர் எம்.முத்துக் குமார் தலைமை தாங்கினார். இதில் இச்சங்கத் தலைவர் வர்கீஸ் வைத்யன் பேசியதாவது:

2022-ம் ஆண்டு உலகளவில் தேயிலை உற்பத்தி விகிதங்கள் 2021 ஆண்டைவிட அதிகரித்துள்ளது. ஆனால் தென்னிந்திய தேயிலை உற்பத்தி மற்றும் விலை அளவுகள் குறைவாகவே காணப்பட்டன

. சரக்குக் கப்பல் போக்குவரத்திற்கான கட்டண விகிதங்கள் 2021-ஐ ஒப்பிட்டு பார்க்கும்போது, குறைவாகவே காணப் பட்டது. குறைவடையும் மகசூல், பருவ கால மாற்றங்கள் ஆகியவை 2022-ல் தோட்டத் தொழிலை பெருமளவு பாதித்தன.

தோட்ட விளைபொருட்கள் உற்பத் தியில் தொழிலாளர் ஊதியம் மற்றும் அதனைச் சார்ந்த செலவுகள் 65%மாக அமைந்துள்ளதால், இதனை கருத்தில் கொண்டு, தோட்டத்தொழிலாளர் ஊதிய விகிதம் உரிய முறையில் நிர்ணயம் செய்ய ஏதுவாக, ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் இதன்மீது அரசு தரப்பில் சாதகமான நடவடிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக வேலையளிப்பவர் தரப்பில் வழக்கு வியாஜ்ஜியங்களை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தொழிலாளர் நலன் என்பது மட்டுமல்லாமல், தொழிலின் எதிர்காலம் என்பதையும் கணக்கில் கொண்டு சம்பள நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதே வேலை அளிப்போரின் நியாயமான கோரிக்கையாகும்.

தோட்டத் தொழிலில் குறிப்பிட்ட விளைபொருட்கள் மட்டுமே பயிரிடப்பட வேண்டும் என்ற தற்போதைய நிலையை மாற்றம் செய்து, மலைப்பகுதி சுற்றுலா போன்ற புதிய ஏற்பாடுகளை தோட்ட நிறுவனங்கள் துவங்கிட அரசு உரிய சட்டத்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2022-ல் தோட்ட நிறுவனங்கள் யூரியா, எம்.ஓ.பி. போன்ற மானிய விலை ரசாயன உரங்களின் தட்டுப்பட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டன. தேவையான உரத் தேவையை தங்கு தடையின்றி பெற்றிட மாநில அரசின் வேளாண்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள தோட்டத் தொழிலை உரிய முறையில் மாநில அரசின் ஏதாவது ஒரு துறையின் கீழ் கொண்டுவந்து ஒருமுகப்படுத்த வேண் டும்.
மாவட்ட ஆட்சியர்களின் தலை மையில் செயல்படும் மாவட்ட வனக்குழுக்களின் செயல்முறை நடவடிக் கைகள் உரிய கால அளவுக்குள் முடிக் கப்பட வேண்டும் என்றார்.

‘உபாசி’ தலைவர் சி.ஸ்ரீதரன், பெங்க ளூரு இந்திய தோட்ட மேலாண்மை நிறுவன இயக்குநர் டாக்டர் ராகேஷ் மோஹன் ஜோஷி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கத் துணைத் தலைவர் வினோதன் கந்தையா நன்றி கூறினார்.

கடந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img