Homeபிற செய்திகள்உலகில் நம் நாட்டு பொருட்களுக்கு மதிப்பு பெருமளவு உயர்ந்து உள்ளது- கொங்குநாடு கல்லூரி விழாவில் ஆளுநர்...

உலகில் நம் நாட்டு பொருட்களுக்கு மதிப்பு பெருமளவு உயர்ந்து உள்ளது- கொங்குநாடு கல்லூரி விழாவில் ஆளுநர் தமிழிசை பேச்சு

கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜி 20 மற்றும் ஒய் 20என்ற சிறப்புரை நிகழ்ச்சி இன்று (23ம் தேதி )நடைபெற்றது

இந்த கூட்டத்தில் “வேலையின் எதிர்காலம் இண்டஸ்ட்ரி 4-0 இன்னோவேசன் மற்றும் 21ஆம் நூற்றாண்டு திறன்கள்” என்ற தலைப்பில்நடைபெற்ற விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாக்கு வந்திருந்த அனைவரையும் ஒய் 20 ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் வரவேற்று பேசினார். விழாவுக்கு கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலளார் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமை தாங்கி பேசினார்.

விழாவில் புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திரா பிரியங்கா, நயினார் நாகேந்திரன் எம்.பி., சிரவை ஆதீனம் தவத்திரு ராமநாத குமரகுருபர சுவாமிகள் சி.கே.ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவகுமார் டாப்ஸ் ஸ்கூல் தாளாளர் கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டார்.

விழாவில் கவர்னர் தமிழிசை சௌந்திர ராஜன் பேசும்போது கூறியதாவது:-
ஜி. 20 உலகத்திற்கு ஆனது. ஒய்20 இளைஞர் களுக்கானது. இந்தியாவில் 90 ஆயிரம் ஸ்டார்ட்அப் கம்பெனிகள் வந்து உள்ளது. உற்பத்தி பெருகியுள்ளது உலக அளவில் நம் நாட்டு பொருள்களுக்கு மதிப்பு உயர்ந்து உள்ளது

உலகில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. உங்கள் பங்கு உலக சுற்று சூழல் பாதுகாப்பு, சேவைகள் என்பதில் பங்கு இருக்க வேண்டும்.

நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் எடுத்த நடவடிக்கை காரணமாக 5-வது மிக பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகியுள்ளது. ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பேசுவதாக எடுத்து கொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் கூறினர்.

படிக்க வேண்டும்

spot_img