fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா மகளிர் கல்லூரி சார்பில் பொங்கல் விழா, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரி சார்பில் பொங்கல் விழா, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை, சுங்கம் நிர்மலா மகளிர் கல்லூரி சார்பில் பொங்கல் விழா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொங்கல் விழாவை முன்னிட்டு, மாணவிகள் நாட்டுப்புற நடனம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய நடனமாடினர். அதைத்தொடர்ந்து உறியடித்தல், பறையடித்தல், வடம் இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

இதில் மாணவிகள், பேராசிரியர்கள் ஆசிரியரல்லாத ஊழியர்கள் என அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். விழாவில் கல்லூரி செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரிபியோலா, துணை முதல்வர், புல முதன்மையர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கோவை, சுங்கம் சந்திப்பில் மாநகரப் பிரிவு காவல் காப்பாளர்கள் நிர்வகிக்கும் நிர்மலா மகளிர் கல்லூரி சாலை பாதுகாப்புப் படையானது சாலை பாதுகாப்பு வார விழாவை கொண்டாடியது.

இதை முன்னிட்டு நேற்று காலை 11 மணிக்கு சாலை பாதுகாப்புப் படையினர் போக்குவ ரத்தை சீர் செய்தும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ் நாடு போக்குவரத்து காவல் காப்பாளர் முதன்மை அதிகாரி சாம் பாபு வழிகாட்டுதலில் கல்லூரியின் சாலை பாதுகாப்பு படை அதிகாரி மகேஸ்வரி இப்பேரணியை வழிநடத்திச் சென்றார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்று பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img