fbpx
Homeபிற செய்திகள்பொங்கல் பண்டிகையை சினிமாவுடன் இணைந்து கொண்டாட சிறப்பு பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது ஓரியோ

பொங்கல் பண்டிகையை சினிமாவுடன் இணைந்து கொண்டாட சிறப்பு பேக்குகளை அறிமுகப்படுத்துகிறது ஓரியோ

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையும், சினிமா ஆவலையும் ஒன்றிணைத்து கொண்டாட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேக்குகளை, இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் குக்கி பிராண்டான ஓரியோ அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து மாண்டலெஸ் இந்தியாவின் மார்கெட்டிங் துணைத்தலைவர் நிதின் சைனி கூறுகையில், ‘’பொங்கல் என்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகை மட்டுமல்லாமல் கோலிவுட் திரைப்படங்கள் வெளியாகும் காலமுமாகும்.

எங்களுடைய லிமிட்டெட் எடிஷன் ஓரியோ மூவி டிக்கெட் பேக்குகள் மூலம் ஓரியோ பிரியர்களுக்கு முதல் நாள் முதல் காட்சி என்ற பிரத்யேகமான திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை வழங்கி அனைவரின் பொங்கல் கொண்டாட்டங்களுக்கும் இனிமையையும் மகிழ்ச்சியையும் அளிப்போம்‘’ என்றார்.

சென்னை முழுவதும் உள்ள ஓரியோ ஆர்வலர்களின் இதயங்களை கவரும் நோக்கத்துடன் ஓரியோ சிறப்பு ரூ.35 பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. நீல நிற பேக்குகள் தவிர, லிமிடெட் எடிஷன் மூவி டிக்கெட் பேக்குகளையும் ஓரியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

கிளாசிக் பிளாக் மற்றும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட இந்த 2,000 சிறப்பு பேக்குகள் கோல்டன் டிக்கெட்டாக செயல்படும். இது 2,000 அதிர்ஷ்டசாலி நுகர்வோருக்குப் பிடித்த படங்களின் பிரத்யேக முதல் நாள் முதல் காட்சிக்கு இலவச நுழைவை வழங்குகிறது.

இது பிக் பாஸ்கெட்டில் பிரத்தியேகமாக கிடைக்கும், இந்தப் பேக்குகளைப் பெறும் ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்த திரைப்படத்தை தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் ரசித்துக் கையில் இருக்கும் ஓரியோவின்
சுவையை அனுபவிக்கலாம்.

மோண்டலெஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (முன்னர் காட்பரி இந்தியா லிமிடெட்) இந்தியாவில் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 1948ல் இந்தியாவில் காட்பரி டெய்ரி மில்க் மற்றும் போர்ன்விட்டாவை அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனத்தின் தயாரிப்பாக ஓரியோ வெளிவருகிறது.

படிக்க வேண்டும்

spot_img