கோவை மறைமாவட் டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப் பட்ட சிஎஸ்ஐ ஈரோடு & -சேலம் மறைமாவட்டத்தின் பிஷப் பைத் தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிட்டி தலைவர் சிஎஸ்ஐ மாடரேட்டர் கமிஷரி ரெவரன்ட்டாக்டர் டி சந்திரசேகரன் தெரிவித் தார். ஈரோடு சிஎஸ்ஐ மகளிர் கலைக் கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேர்தல் கமிட்டியின் கவுரவச் செயலர் ரெவ் ஏ ஜேக்கப் லிவிங்ஸ்டன், பொருளாளர் நெல்சன் கொர்னேலியஸ், துணைத் தலைவர் டி எழில் ராபர்ட் கெவின் ஆகியோர் 166 வாக்காளர்களிடம் (தேவா லயத் தலைவர்கள்) வேட்பு மனுக்களை பெறுவர்.
ஈரோடு, சேலம், நாமக் கல், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கியது புதிய மறை மாவட்டம். ஐந்து உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவர் பிஷப் பாக தேர்ந்தெடுக்கப்படு வார். புதிய மறை மாவட் டம் சிஎஸ்ஐயின் கீழ் 25வது வகையாகும். கோயம்புத்தூர் மறை மாவட்டத்தை பிரிப்பதை எதிர்த்து சிலர் நீதிமன்றத் திற்கு சென்றாலும் தேர்த லுக்கு தடை விதிக்கப்பட வில்லை.
ஈரோட்டில் உள்ள சிஎஸ்ஐ வளாகத்தை வாடகைக்கு விட்டது தொடர்பான புகார்கள் சென்னை சிஎஸ்ஐ சினாட் மூலம் தீர்க்கப்படும். சிறு பான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய கபர்தஸ் தான், மயா னம், வழிபாட்டுத் தலங் களுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட சிறுபான்மை அமைப்புக ளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்த அரசுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.