அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக மார்ச் 8 உலக மகளிர் தினத்தை, போற்றும் வகையில் தூய்மை பாதுகாவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பாக உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது. இந்த நாளை போற்றும் வகையில், தூய்மை பாதுகாவலர்களாக பணியாற்றும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோவை கணபதி அடுத்த, கேஆர்ஜி நகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞரும், ஆர்ஐ, மாவட்ட ஆளுநர் 3201 ரோட்டரி மற்றும் இவ்வமைப்பின் கௌரவ தலைவர், சுந்தர வடிவேலு, மற்றும் உதயம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் வழக்கறிஞர் சுந்தர வடிவேலு பேசியபோது:
ஆண்களுக்கு நிகராக தற்பொழுது பெண்களும் அனைத்து துறையிலும் சாதிக்கும் நிலை வந்துவிட்டது, ஆயினும் நம் இந்திய தேசம், அனைத்து தேசங்களின் மத்தியில், தலை நிமிர்ந்து நிற்க பெண்கள் சாதிக்க முன்வர வேண்டும்.
பெண்களுக்கு உறுதுணையாக ஆண்கள் துணை நிற்கவும் வேண்டும் எனவும், அவ்வாறு பெண்கள் சாதிக்கும் நிலையில், நிச்சயமாக இந்திய நாடு ஒரு பெருமை மிகுந்த நாடாக அனைத்து நாடுகளின் முன்னிலையில் தனி மதிப்பை பெறும்.
அதற்கு பெண்கள் நாம் பெண்கள் என்று ஒளிந்து கொள்ளாமல், முன் வந்து நிற்க வேண்டும். எதிர்ப்புகள் இருந்தாலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடு முன்வர வேண்டும். அவ்வாறு வரும் பட்சத்தில் நிச்சயமாக நாமும், நமது நாடும் வளம் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சட்ட விழிப்புணர்வு கழகம்
இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவன தலைவர் ஆர்கேகுமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் இச்சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் முனைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த விழாவில் இச்சங்கத்தின் மாநில தலைவி லதா அர்ஜுனன், மாவட்ட துணை தலைவி ரிஸ்வானா பர்வீன், இசை கலைமாமணி சாந்தினி, இணைச்செயலாளர் சித்திரகலா, மகளிர் அணி செயலாளர் முத்தமிழ்செல்வி, மாவட்டத் துணைத் தலைவர் நாராயணா செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் சுந்தரபாலன், துணைத் தலைவர் விஸ்வநாதன், சமூக ஆர்வலர் பாபு, மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள், அப்பு, மது, மணிகண்டன், ராமஜெயம், என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,