fbpx
Homeபிற செய்திகள்‘எல் அண்ட் டி - எஜூடெக்’ நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

‘எல் அண்ட் டி – எஜூடெக்’ நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரி, “எல் அண்ட் டி – எஜூடெக்” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் எல்.டி.ஐ. மைண்ட் ட்ரீ ஆட்டோமேஷன் புரோக் ராம் மேனேஜ்மென்ட் இயக்குநர் பிரசன்ன கிருஷ் ணன் பேசியதாவது:
தொழில்நுட்பத்துறை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

பணமில்லா பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டுமென் றால் வங்கிக்கு சென்று அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து, வரிசையில் காத்திருந்து செலுத்த வேண்டும்.

வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்ப வேண்டு மென்றால், 4 முதல் 7 நாட்கள் ஆகும். அதற்கு கமிஷன் செலுத்த வேண்டும். இன்று அந்த நிலை மாறியுள்ளது.
ஜி பே, பேடிஎம் போன்ற வசதிகள், இவற்றை மிகவும் எளிமையாக்கியுள்ளன. இன்று அனைத்தும் செல் போன் செயலிகளில் சாத்தியமாகியுள்ளது.

மாணவர்கள் தங்களுடைய தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், இணைய பாதுகாப்பு போன்றவற்றை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற தொழில்நுட்ப அறிவை “எல் அண்டு டி எஜூடெக் நிறுவனம்” மாணவர்களுக்குக் கொண்டு செல்ல உள்ளது என்றார்.

எல் அண்டு டி எஜூடெக் நிறுவனத்தின் கல்லூரி தொடர்பு – வர்த் தகப் பிரிவு தலைவர் எம்.எஃப். ஃபெபின் பேசும்போது, “கல்லூரி யுடன், தொழில்நுட்ப நிறுவனம் ஏன் இணைய ஏன் இணைய வேண்டும் என்றால் நிறுவனத்தால் மாணவர்களும், கல்லூரி யால் நிறுவனமும் பயன் பெற முடியும்.

எல் அண்டு டி நிறுவனம் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகும். இதில் மாணவர்கள் இணையும் போது, அவர்க ளுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப் புகள் மூலம் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன வென்பதை, முன்கூட்டியே மாணவர்களுக்குக் கொண்டுச் சென்று, அவர்களை தகுதிவாய்ந்த ஊழியர்களாக உருவாக்குகிறது” என்றார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, எல் அண்டு டி எஜூடெக் நிறுவனத்தின் கல்லூரி தொடர்பு – வர்த்தகப் பிரிவு தலைவர் எம்.எஃப். ஃபெபின் ஆகியோர் கையொப்பமிட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
பி.சி.ஏ. துறைத்தலைவர் முனைவர் டி.ஹரிபிரசாத் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img