fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவையில் கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை மண்டல கட்டுமான என்ஜினியர்கள் சங்க சிறப்பு கூட்டம் ராம் நகர் விஜய் பார்க்கின் ஓட்டலில் நடைபெற்றது. சங்கத் தலைவர் இன்ஜினியர் ராஜதுரை தலைமை தாங்கினார்.

சங்க செயலாளர் தாமோதரசாமி, பொருளாளர் சோமசுந்தரம், துணைத் தலைவர் மரியா ஆரோக்கியசாமி, முன்னாள் தலைவர் ஜெயவேல், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

  1. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை சற்று குறைந்து இருந்தது. அதற்காக தமிழக முதல்வரை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.
  2. கடந்த வாரம் கட்டுக்குள் இருந்த கட்டுமான பொருட்களின் விலை தற்போது அனைத்து கட்டுமான மூலப்பொருட்களும் ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் விதம் உயர்ந்துவிட்டது. இதனால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு கட்டுமான மூலப்பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.
  3. கட்டுமான தொழில் சிறக்க என்ஜினீயர் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. விவசாயத்திற்கு அடுத்து கட்டுமான தொழில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆகையால் கட்டுமான மூலப் பொருள்களின் விலையை குறைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img