fbpx
Homeபிற செய்திகள்கே.எம்.சி.ஹெச் மருத்துவக்கல்லூரிக்கு சிறந்த ஆராய்ச்சி, புதுமைக்கான விருது

கே.எம்.சி.ஹெச் மருத்துவக்கல்லூரிக்கு சிறந்த ஆராய்ச்சி, புதுமைக்கான விருது

கோவை கேஎம்சிஹெச் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2026-ஆம் ஆண்டிற்கான ஏ.ஹெச்.பி.ஐ குளோபல் கான்க்லேவ் மாநாட்டில், “சிறந்த ஆராய்ச்சி மற்றும் புதுமை” விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த விருது வழங்கும் விழா, கடந்த ஜனவரி 23, 2026 அன்று மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் கேஎம்சிஹெச் குழுமம் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது. சிறந்த ஆராய்ச்சி மற்றும் கண்டு பிடிப்புக்கான விருதை கேஎம்சிஹெச் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வென்றது. சிறந்த மருத்துவச் செயல்பாடுகள் மற்றும் சிறந்த அவசரக்கால சிகிச்சை இந்த இரு விருதுகளையும் கேஎம்சிஹெச் மருத்துவ மனை வென்றது.

இந்திய மருத்துவ சேவை வழங்குநர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கிர்தர் கியானி இந்த விருதை வழங்கினார். இதனை கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி கல்வி திட்டத்திற்கான டீன் டாக்டர் எம்.ஜி.ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.
இந்த சாதனை குறித்து கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில், “இந்த அங்கீகாரம் எங்களது மருத்துவ முன்னேற்றத்திற்கு கிடைத்த சான்று. இது நிறுவனத்திற்கான விருது மட்டுமல்ல, நோயாளி களுக்கு சிறந்த தீர்வுகளைக் காண உழைக்கும் எங்களது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்“ எனத் தெரிவித்தார்.

கேஎம்சிஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், நவீன மருத்துவத்திற்கு ஆராய்ச்சியே முதுகெலும்பு என்றும், இச்சாதனை தங்களை இன்னும் சிறப் பாகச் செயல்படத் தூண்டு வதாகவும் குறிப்பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img