கோவை ரெசிடென்சி டவர் ஓட்டலில் கலஷாபைன் ஜீவல்ஸ் சார்பில் கைவினை தங்க நகைகள் கண்காட்சி விற்பனை தொடக்கவிழா இன்று (8-ந்தேதி) நடைபெற்றது. விழாவுக்கு கலஷா இயக்குனர் அபிஷேக் சந்தா தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.
நகை கண்காட்சியை சென்னை தீபா கேஸ் ஏஜென்சிஸ் பங்குதாரர் டி.சுகந்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.
சிறப்பு விருந்தினர்
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் ஜவுளி தொழில்முனைவோர் தீப்தி பியுஷ் சங்கை, கதிர் கல்வி நிறுவனம் செயலாளர் லாவண்யா கதிர், பெரியநாயக்கன்பாளையம் சபிதா வெங்கடேசன், உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்த கலஷாபைன் ஜீவல்லரி இயக்குனர் அபிஷேக் சந்தா கூறியதாவது:-
கோவையில் நடைபெறும் இந்த கண்காட்சி விற்பனை இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 10ம் தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது.
இந்த நகை கண்காட்சியில் தங்கம் வைரம், பிளாட்டினம் உள்பட கலைநயமிக்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.மேற்கண்டவாறு அவர் கூறினார்.



