fbpx
Homeபிற செய்திகள்மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனமாக உருவெடுக்கும் ‘ஸ்ரீராம் பைனான்ஸ்’

மிகப்பெரிய ரீடெய்ல் நிறுவனமாக உருவெடுக்கும் ‘ஸ்ரீராம் பைனான்ஸ்’

வர்த்தக வாகனங்களுக்கான மிகப்பெரிய நிதியுதவி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்கலில் தலைமை வகிப்பதோடு மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான நிதி வழங்கலில் மிகப்பெரிய நிறுவனமாகவும் திகழும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஸ்ரீராம் ஃபைனான்ஸ்) என்பதை உருவாக்க ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன.

ரூ.40,900 கோடி என்ற வலுவான நிகர மதிப்பையும் மற்றும் ரூ. 1,71,000 என்ற அளவிற்கு மேலாண்மையின் கீழ் சொத்துக்களையும் (AUM) கொண்டிருக்கும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு பெருநிறுவனமாக ஸ்ரீராம் ஃபைனான்ஸ் இந்தியாவெங்கும் 6.7 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுய தொழில் செய்யும் நபர்களையும் மற்றும் குறு, சிறு நடுத்தர (MSME) தொழில் நிறுவன பொருளாதாரத்தை முன்னேற் றத்தை நோக்கி செலுத்துவது மீது இந்நிறுவனம், சிறப்பு கவனம் செலுத்தும்.

ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்ற இந்நிறுவனத்தின் செயலாக்கத் துணைத் தலைவராக, ஸ்ரீராம் குழுமத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற உமேஷ் ரேவன்கர் செயலாற்றுவார். அவர் கூறியதாவது:

வாடிக்கையாளர் நலன்

வாடிக்கையாளர் நலன் மீது கூர்நோக்கம் கொண்ட ஒரு நிறுவனமாக திகழும் நாங்கள், அதிக திட்டங்களை அறிமுகம் செய்ய இயலும். வாடிக்கையாளர்களுக்கு விரைவான கடன் வசதி கிடைக்கப்பெறுவதற்கு உதவ முடியும். திறனையும், வாடிக்கையாளர் சேவை அளவுகளையும், தரத்தையும் மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தில் நாங்கள் அதிகமாக முதலீடு செய்திருக்கிறோம் என்றார்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி ஒய்எஸ் சக்கரவர்த்தி கூறியதாவது: இந்தியா வளர்ச்சி கண்டுவரும் இக்காலகட்டத்தில் MSME துறையினர் மத்தியில் நிதிவசதி / கடனுக்கு வலுவான தேவை இருப்பதை பார்க்கிறோம்.

3600+ அமைவிடங்களில் அலுவலகங்களை கொண்டிருப்பதால் எப்போதும் சந்தைக்கு நெருக்கமானவர்களாக இருந்து வருகிறோம். வர்த்தக வாகனங்களுக்கு நிதியுதவி, MSME துறைக்கு நிதியுதவி, தனிநபர் கடன்கள், தங்க கடன்கள் அல்லது வாகனக் கடன்கள் என அனைத்து பிசினஸ் பிரிவுகளும் வேகமான வளர்ச்சியை நோக்கி பயணிக்கத் தயாராக இருக்கின்றன என்றார்.

நிறுவனத்தின் சேர்மனாக ஜுகல் கிஸோர் முஹபத்ரா மற்றும் சுதந்திரமான இயக்குநராக மாயா சின்ஹா நியமனம் செய்யப்பட்டிருப்பதையும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் அறிவித்திருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img