கோவை கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள ஜான் சன்ஸ் தொழில்நுட்பக் கல் லூரியில் 14-வது ஆண்டு விழா நடந்தது. ஜான்சன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜான்சன்ஸ் உயர்கல்விக் குழுமங்களின் தலைவர் டி.எஸ்.நடராஜன் தலைமை தாங்கி பேசியதாவது:
ஜான்சன்ஸ் தொழில் நுட்பக் கல்லூரி தரமான கல்வி மற்றும் செயல்திறன் மூலம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த கல்வி மற்றும் பாடத் திட்டங்களுக்கு அப்பாற் பட்ட தரங்களுக்கு புகழ் பெற்றது.
அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஆசிரியர் சமூகம், இக்கல்லூரியின் மிகப்பெரிய பலம். அவர்கள் குழுப்பணி, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மூலம் தொடர்ந்து முன்னேற முயற்சிக்கும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். இந்தியா முழுவதிலிருந்து இக்கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர் என்றார்.
பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு
தலைமை விருந்தினர், எவர்சென்டை கன்ஸ்ட்ரக்ஷன் பி.லிட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் கே.சரவணன் பேசுகையில், விரிவான பொறியியல் பயன்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அனைத்து பொறியியல் துறைகளின் பங்களிப்பையும் எடுத்துரைத்தார். இளம் பொறியாளர்களின் நெறிமுறை மற்றும் தார்மீக கடமைகளின் இன்றியமையாமை என்பதை வலியுறுத்தினார்.
சென்னை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரத்தினசாமி மாணவர்களைப் பாராட்டி, நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு பொறியாளரின் பங்கையும் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
டாக்டர் கே.சரவணன், ரத்தினசாமி, கல்லூரி துணைத் தலைவர் மற் றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் கல்வியில் முத லிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், தகுதிச் சான்றிதழ்களை வழங்கினர்.
கல்லூரி மாணவி பி.ஜி.ஸ்ருதி, ஒருங்கிணைப்பாளர் குகூள் டிஎஸ்சி, 2022&-23-ம் கல்வி ஆண்டுக்கான ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். துணை முதல்வர் டாக்டர் எஸ்.இளங்கோவன் வேலைவாய்ப்பு அறிக்கையை வழங்கினார்.
துணைத் தலைவர்கள் டி.என்.கலைமணி, டி.என்.திருக்குமார், நிர்வாக இயக்குநர் டி.நவீன்குமார் ஆகியோர் கலந்து கொண் டனர்.