உலக குளுக்கோமா வாரம் , மார்ச் 12 முதல் 18 வரை கண்பார்வை பேரிழப்பை தடுக்க அனு ஷ்டிக்கப்படுகிறது.
உலக குளுக்கோமா வாரம் என்பது குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத் துவதற்காக உலக குளுக் கோமா சங்கத்தின் (WGA) உலகளாவிய முயற்சியா கும்.
“உலகளவில் 80 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப் புள்ளது, இதில் 2.1 மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வையை இழந்துள்ளார்கள் என நம்பப்படுகிறது.
அதில் 40 வயதிற்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் இந்தியர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு 12.8% பேர் கண்பார்வையை மேலும் இழக்க வாய்ப்புள்ளது. இந்த நோயின் பாதிப்பு பற்றி பல்வேறு தரப்பட்ட மக்களிடம் நடத்திய ஆய்வுகளின்படி சுமார் 2% முதல் 13% வரை பாதிப்பு ஏற்படும் என்பதை வேலூர் கண் ஆய்வு, சென்னை குளுக்கோமா ஆய்வு, அரவிந்த் கண் ஆய்வு, ஆந்திர மாநில கண் நோய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய், உயர் கிட்டப்பார்வை, காயம், வீக்கம், ஸ்டீராய்டு உபயோகித்தல் மற்றும் பிறவி கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு குளுக்கோமா வர அதிக வாய்ப்புள்ளது என டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, மருத்துவ இயக்குநர் மற்றும் குளுக் கோமா பிரிவு ஆலோசகர், தி ஐ பவுண்டேஷன், கோவை மற்றும் தி ஐ பவுண்டேஷன், கோவை குளுக்கோமா மற்றும் குழந்தைகள் கண் மருத்துவ பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஆர், முரளிதர், டாக்டர் வைஷ்ணவி ஆகியோர் உறுதிசெய்துள்ளனர்.
விழிப்புணர்வு
உலக குளுக்கோமா வாரத்தையொட்டி தி ஐ பவுண்டேஷனின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராம மூர்த்தி கூறுகையில், “ குளுக்கோமா வாரத்தை ஒட்டி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி, முழுமையான கண்பரிசோதனை செய்து, குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, கண் பார்வை இழப்பை தடுக்க இலவச கண் அழுத்த நோய் (குளுக்கோமா) பரிசோதனை தி ஐ பவுண்டேஷனின் அனைத்து கிளைகளில் வழங்கவுள்ளோம். இந்நோயினை கண்டறிய செய்யப்படும் பரிசோதனை, சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் செய்துதரப்படும் என்றார் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி. குளுக்கோமா பற்றி தகவல்களை அறியவும், முன்பதிவு செய்யவும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9442217796, 0422 4242000