fbpx
Homeபிற செய்திகள்கோவை ஐடி பார்க் புதிய கட்டிடத்தில் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

கோவை ஐடி பார்க் புதிய கட்டிடத்தில் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

கோவையில் ஐடி பார்க்கில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தில் 26 நிறுவனங்கள் அமைய உள்ளது. இதன்மூலம் 14 ஆயிரம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என – ஆய்விற்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழகச் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கோவை ஐடி பார்க்கில் 114.6 கோடியில் கட் டப்பட்டு வரும் கட்டிட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

இளைஞர்கள் பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். பொறியியல் பட்டதாரிகள் அதிகம் இருக்கும் பகுதி கோவை.

இங்கு எல்காட் மூலமாக கட்டப்பட்டு வந்த கட்டுமான பணி தாமதமாக இருந்ததால் நேரில் ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டார்
இந்த கட்டிடம் 114 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண் டதாக கட்டப்பட்டு வருகின்றது.

26 கம்பெனிகள்

தீயணைப்பு வசதி, லிப்ட் வசதி, பார்க்கிங் என அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த வளாகத்தில் 26 கம்பெனிகளுக்கு இடம் கொடுக்க முடியும்.

இதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் இந்த கட்டுமான பணி முடிவடையும். கலைஞர் தமிழகத்தின் முதல் வராக இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பல உறுப்பு கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக பொறியாளர்கள் உள்ளனர்.

கோவையில் ஐ.டி நிறுவனங்கள் அமைய இன்னும் கட்டிடம் தேவை இருக்குமானால் அரசு இடங்கள், தனியார் இடங்களை கையகப்படுத்தி கட்டப்படும்
இளைஞர், பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த இந்த அரசு முனைப்புடன் இருக்கிறது.

தமிழகத்தில் பொறியியல் பட் டதாரிகள் அதிகம்.
மாவட்ட தலைநகரங்களில் தேவை இருக்குமானால் ஐ.டி நிறு வனங்களுக்கு கட்டிடவசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக உடல்நிலை பாதிக் கப்பட்டு ஓய்வெடுத்து வரும், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கை (முன்னாள் எம்எல்ஏ) அவரது இல் லத்திற்கு நேரில் சென்று அமைச்சர் எ.வ.வேலு, நலம் விசாரித்தார்.

இந்த நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டிபி சுப்பிரமணியம், ஏர்போர்ட் ராஜேந்திரன், தீர்மான குழு இணைச்செயலாளர் நாச்சி முத்து, ஏஎஸ்.நடராஜ், அக்ரிபாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img