fbpx
Homeபிற செய்திகள்தமிழகத்தில் மலபார் கோல்டு டைமண்ஸ் 20-வது ஷோரூம் சென்னை ஆவடியில் திறப்பு

தமிழகத்தில் மலபார் கோல்டு டைமண்ஸ் 20-வது ஷோரூம் சென்னை ஆவடியில் திறப்பு

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால்பதித்து தனது வர்த்தகத்தை விரி வாக்கி கொண்டு உள்ள மலபார் குழுமத்தின் முன் னோடி நிறுவனமான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின், புதிய கிளையை சென்னை ஆவடி-யில் நடிகை தமன்னா திறந்துவைத்தார்.

விழாவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டலத் தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிகத் தலைவர் சபீர்அலி, தமிழ்நாடு வடக்கு மண் டலத் தலைவர் அமீர் பாபு, தெற்கு மண்டலத் தலைவர் சுதிர் முகமது, ஆவடி கிளைத் தலைவர் சித்தார்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், தற்போது 10 நாடுகளில் 300 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது,

20 கிளைகள்

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், ராமநாத புரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 20 கிளைகளை கொண்டுள்ளது.

ஷோரூமில் ஏராளமான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் உள்ளன. மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனை யகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும்.

அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினைகலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை ஷோரூமில் இடம் பெற்றுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img