சிதம்பரத்தில் பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவ்ஷதி கேந்திரா மற்றும் சிதம்பரம் சென்டிரல் ரோட்டரி சங்கம் இணைந்து சிதம்பரம் மாலை கட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தியது.
முகாமிற்கு சாசன தலைவர் முகம்மதுயாசின் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் கேசவன், கோவிந்தராஜன், கவுன்சிலர் அப்பு சந்திரசேகரன், உறுப்பினர்கள் விஜயபாலன், பழனியப்பன், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க உறுப்பினர் விஸ்வநாதன் வரவேற்றார்.
முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை ஆளுநர் தீபக்குமார் கலந்துகொண்டு பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.இந்த மருத் துவ முகாமில் டாக்டர்கள் பிரவீன்குமார், கிருஷ்ண ராஜ், அங்கீதாசிங், பிரேமா, முருகன், திவாகர் உள்ளிட்ட டாக்டர் குழுவினர்கள் கலந்து கொண்டு சுமார் 80 பேருக்கு சிகிச்சை அளித்து, இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.
முகாமில் சங்க உறுப்பினர்கள் அனிதா தீபக்குமார், அருள், செல்வி, பன்னாலிஜெயின், பொறியாளர் புகழேந்தி, ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.