மத்திய கண்காணிப்பு ஆணையம் உத்தரவுப்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளைக் கொண்டாடும் விழிப்புணர்வு வாரத்தைக் கடைபிடிக்கிறது.
அதே போல் இந்த ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை ‘தேசத்தின் முன்னேற்றத்திற்கான ஒருமைப்பாட்டுக் கலாச்சாரம்‘ என்ற கருப் பொருளுடன் விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 4 பள்ளிகள், 2 கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை வங்கி மேற்கொண்டு வருகிறது.
இன்று காலை கோவையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பிராந்திய அலுவலகம் சார்பில் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பந்தய சாலையில் நடை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் கே.வேலாயுதம் கொடிய சைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வங்கியின் உதவிப்பொது மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.