fbpx
Homeபிற செய்திகள்கோவை ஹாஷ் 6 ஹோட்டல்ஸில் 1 டன் கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் நிகழ்ச்சி

கோவை ஹாஷ் 6 ஹோட்டல்ஸில் 1 டன் கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் நிகழ்ச்சி

கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்குகளுக்கான மூலப் பொருள்கள் கலக்கும் திருவிழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் எதிரில் அமைந்துள்ள ஹாஷ் 6 ஹோட்டலில் நடைபெற்றது. பாரம்பரியமாக நடைபெறும் இந்த விழா, கிறிஸ்துமஸ் விழாவிற்கான துவக்க விழாவாகக் கருதப்படுகிறது.

கேக் தயாரிக்கும் கலவையுடன் முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்டாச்சியோ, ஆரஞ்சு தோலுரித்தல், கறுப்பு கரும்பு, அத்திப்பழம், உலர்ந்த உப்பு, இலவங்கப்பட்டை மற் றும் கிராம்புகள் ஆகியவை சேர்க்கப்படும்.

இந்தக் கலவையை கலக்கும் விழாவில் நிறுவனங்களில் பணியாற்றுவோர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இந்த கலவைகளை கலக்க வேண்டும். இவற்றுடன் பானங் கள், பொன்னிறப்பாகு, தேன் மற்றும் வெண்ணிலா சாரம் போன்றவற்றை கலந்து இந்த கேக் கலவையை 1 டன் கிலோ எடை வரும் வரை கலந்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட, அனைவரும் தலைமை சமையல் கலைஞர்களை போல உடையும், தலைப்பாகையும் அணிந்து இருந்தனர். விழாவின் போது, இவர்கள் அனைவரும் கேக்குகள் செய்வதற்காக மூலப் பொருள்களை சரியான விகிதத்தில் கலந்தார்கள். இந்த விழாவிற்கு ஹாஷ் 6 ஹோட்டலின் தலைமை செப் ராஜா தலைமை வகித்து, கேக் கலவை கலக்கும் விழாவை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து கோவை ஹாஷ் 6 ஹோட்டல் பொது மேலாளர் ஆர்.சுசின் கூறியதாவது :- கிறிஸ்து மஸ் விழாவிற்காக கேக் கலக்கும் விழாவானது உலகெங்கும் நடைபெறும் பாரம்பரிய திருவிழாவாக கருதப்படுகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த விழாவை எங்க ளின் ஹாஷ் 6 ஹோட்டல் கோயம்புத்தூரில் நடத்துவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர் என நம்புகிறோம் என்றார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மார்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ், இயக்குனர் மற்றும் சர்வதேச ரோட்டரி 3201, சிறப்பு குழந்தைகள் நலம் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன். எகேஆர்எப்சி. டாக்டர். லீமா ரோஸ் மார்டின் கலந்து கொண்டார்.

மேலும் ஹாஷ் 6 ஹோட்டலை சேர்ந்த செப்கள், ஹோட்டல் அதிகாரி கள், ஊழியர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img