fbpx
Homeபிற செய்திகள்ஓராண்டில் 150 ரோபோடிக் அறுவை சிகிச்சை: கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சாதனை

ஓராண்டில் 150 ரோபோடிக் அறுவை சிகிச்சை: கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சாதனை

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை, கடந்த ஒரு ஆண்டில் 150க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளது.


இதுகுறித்து ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் சி.இ.ஓ டாக்டர் ரகுபதி வேலுச்சாமி கூறியதாவது: தமிழ்நாட்டில் மேற்கு மண்ட லத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை களில் புதிய மாற்றத்தை ஜி.கே.என்.எம். மருத்துவமனை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஜி.கே.என்.எம். மருத்துவமனை அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதன் மூலம் மேற்கு தமிழ்நாட்டில் ரோபோடிக் அறுவை சிகிச்சைகளுக்கான முன்னணி மையமாக திகழ்கிறது.


இது ஜி.கே.என்.எம் மருத்துவ மனையின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். உணவுக்குழாய், நுரையீரல், தைராய்டு, வயிறு, கல்லீரல், கணையம், பெருங்குடல் மலக்குடல், சிறுநீரங்கள் மற்றும் இருதயம் உள்பட அனைத்து உறுப்புகளிலும் ஏற்படும் பிரச்னைகளை ரோபோடிக் அறுவை சிகிச்சையின் மூலமாக சரிசெய்திட இயலும்.


இந்த அறுவை சிகிச்சை நிபுணர் குழுவினர் வடு இல்லாத தைராய்டு அறுவை சிகிச்சை, இரைப் பை அறுவை சிகிச்சை, தைமெக்டமி போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளை ரோபோ உதவியுடன் துல்லியமாக செய்துள்ளனர்.

இந்த சிறப்பு வாய்ந்த நிபுணர்கள் குழுவில் டாக்டர்கள் பிரவீன் ரவி சங்கரன், அருள்ராஜ், பி.சந்திரசேகர், கே.எஸ்.வெங்கடேஷ், கமலேஷ், லதா பாலசுப்பிரமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img