கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் மரபணு கோளாறுகள் உள்ள இரண்டு குழந் தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்றும் சிகிச்சை, ரத்தம் மற்றும் மரபணு நோய்களுக்கான ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை வெற்றிகரமாக செய்யபட்டுள்ளது.
தற்போது 2 குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதுகுறித்து ஜி கே என் எம்மருத்துவமனை குழந்தைகள் ரத்த நோய் மற்றும் புற்றுநோய் மருத்துவநிபுணர் டாக்டர் எல் அஜீதா நிருபர்களிடம்கூறியதாவது:-
கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை யில் எலும்பு மஜ்ஜை மற்றும் சிகிச்சை ரத்தம் மற்றும் மரபணு நோய்களுக்கு நவீன சிகிச்சைகள் அளிக்கப் பட்டு வருகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டஇந்த சிகிச்சை பிரிவின் மூலம் 25க்கும் மேற்பட்ட சிக்கலான சிகிச்சைகளை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் வெற்றிகரமாக செய்துள்ளோம்.
சிகிச்சைகளின் தன்மையைப் பொறுத்து நோயின் தன்மையை பொறுத்து செலவினங்கள் மாறுபடும்.
ஆரோக்கியமாக உள்ள அனைவரும் ஸ்டெம் செல் தானமாக தர பதிவு செய்யலாம். மேற்கண்டவாறு அவர் கூறினார்.