கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி பங்களிப்புடன் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்லப்பிராணிகளுக்கான எரிவாயு தகன கூடத்தினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.
உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் அங்குலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி, உதவி ஆணையர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மாவட்ட ரோட்டரி சங்க தலைவர் ராஜ்மோகன்நாயர், மாவட்ட இயக்குநர் மயில்சாமி, உதவி கவர்னர் சுமித்குமார் பிரசாத் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.